Type Here to Get Search Results !

MARK 16 | The Gospel of Mark | Bible Question With Answer | மாற்கு - 16 வேதாகம வினா விடைகள் | Jesus Sam

=================
மாற்கு அதிகாரம் பதினாறு (16)
வேதாகம கேள்வி - பதில்கள்
======================
THE GOSPEL OF MARK | CHAPTER - 16
BIBLE QUIZ QUESTION AND ANSWER TAMIL
==========================
01. மகதலேனா மரியாள் கல்லறைக்கு செல்ல சுகந்தவர்க்கங்களை வாங்கிய நாள்?
A) ஓய்வு நாள்
B) வாரத்தின் முதல் நாள்
C) ஆயத்த நாள்
Answer: A) ஓய்வு நாள்
     (மாற்கு 16:1)

 


02. மகதலேனா மரியாள் இயேசுவை பார்க்க கல்லறைக்கு வந்த நாள்?
A) ஓய்வு நாள்
B) வாரத்தின் முதல் நாள்
C) ஆயத்த நாள்
Answer: B) வாரத்தின் முதல் நாள்
     (மாற்கு 16:2)
 
03. கல்லரையினுள் வெள்ளையங்கி தரித்தவனாய் உட்கார்ந்திருந்தது யார்?
A) இயேசு
B) தோட்டக்காரன்
C) வாலிபன்
Answer: C) வாலிபன்
     (மாற்கு 16:5)
 
04. தூதன் இயேசு உயிர்த்தெழுந்ததை யாருக்கு அறிவிக்க சொன்னான்?
A) சீஷர்கள்
B) பிரதான ஆசாரியர்
C) ஜனங்கள்
Answer: A) சீஷர்கள்
     (மாற்கு 16:7)
 
05. இயேசு உயிர்த்தெழுந்த பின்பு எங்கு போவதாக சொல்லியிருந்தார்?
A) எருசலேம்
B) ஒலிவமலை
C) கலிலேயா
Answer: C) கலிலேயா
     (மாற்கு 16:7)

 


06. இயேசு உயிர்த்தெழுந்து முதல் முதலில் யாருக்கு தரிசனமானார்?
A) சீஷர்கள்
B) கிராமத்துக்கு போகிற இருவர்
C) மகதலேனா மரியாள்
Answer: C) மகதலேனா மரியாள்
     (மாற்கு 16:9)
 
07. இயேசு யாரிடம் இருந்த ஏழு பிசாசுகளை துரத்தினார்?
A) சலோமே
B) யாக்கோபின் தாய் மரியாள்
C) மகதலேனா மரியாள்
Answer: C) மகதலேனா மரியாள்
     (மாற்கு 16:9,10)
 
08. இயேசு உயிர்த்தெழுந்து இரண்டாவது யாருக்கு தரிசனமானார்?
A) சீஷர்கள்
B) கிராமத்துக்கு போகிற இருவர்
C) மகதலேனா மரியாள்
Answer: B) கிராமத்துக்கு போகிற இருவர்
     (மாற்கு 16:12)

 


09. இயேசு உயிர்த்தெழுந்து யாருக்கு மறுரூபமாக காணப்பட்டார்?
A) சீஷர்கள்
B) கிராமத்துக்கு போகிற இருவர்
C) மகதலேனா மரியாள்
Answer: B) கிராமத்துக்கு போகிற இருவர்
     (மாற்கு 16:12)
 
10. இயேசு உயிர்த்தெழுந்து எத்தனை சீஷருக்கு தரிசனமானார்?
A) பத்து
B) பதினொன்று
C) பனிரெண்டு
Answer: B) பதினொன்று
     (மாற்கு 16:14)

 


11. இயேசு உயிர்த்தெழுந்து மூன்றாவது யாருக்கு தரிசனமானார்?
A) சீஷர்கள்
B) கிராமத்துக்கு போகிற இருவர்
C) மகதலேனா மரியாள்
Answer: A) சீஷர்கள்
     (மாற்கு 16:14)
 
12. இயேசு உயிர்த்தெழுந்து சீஷர்களை தரிசிக்கையில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
A) பயந்துகொண்டிருந்தார்கள்
B) போஜனபந்தியிருந்தார்கள்
C) அழுதுகொண்டிருந்தார்கள்
Answer: B) போஜனபந்தியிருந்தார்கள்
     (மாற்கு 16:14)

 


13. விசிவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் ________ .
A) இரட்சிக்கப்படுவான்
B) காப்பாற்றப்படுவான்
C) விடுவிக்கப்படுவான்
Answer: C) விடுவிக்கப்படுவான்
     (மாற்கு 16:16)
 
14. விசிவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் மொத்தம் எத்தனை?
A) ஐந்து
B) ஆறு
C) ஏழு
Answer: A) ஐந்து
1.      என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவீர்கள்
2.      நவமான பாஷைகளைப் பேசுவார்கள்
3.      சர்ப்பங்களை எடுப்பார்கள்
4.      சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அதுத அவர்களைச் சேதப்படுத்தாது
5.      வியாதிஸ்தர்மேல் வைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்
    (மாற்கு 16:17,18)
 
15. சீஷர்கள் எங்கும் பிரசங்கம்பண்ணி, கிரியையை நடப்பித்து எதை உறுதிப்படுத்தினார்கள்?
A) வசனம்
B) வார்த்தை
C) அற்புதம்
Answer: A) வசனம்
     (மாற்கு 16:20)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.