Type Here to Get Search Results !

MARK 15 | Bible quiz question and answer tamil | மாற்கு சுவிசேஷம் பைபிள் கேள்வி பதில்கள் | Jesus Sam

==================
மாற்கு அதிகாரம் பதினைந்து (15)
பைபிள் வினா விடைகள் தமிழில்
=====================
MARK CHAPTER 16
BIBLE QUIZ QUESTION ANSWER TAMIL
===================
01. நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டது யார்?
A) பிலாத்து
B) பிரதான ஆசாரியன்
C) ஏரோது
Answer: A) பிலாத்து
     (மாற்கு 15:2)
 
02. கலகம்பண்ணி, அந்த கலகத்தில் கொலை செய்து, அதற்காக காவல்பண்ணப்பட்டவர்களில் ஒருவன் யார்?
A) பரபாஸ்
B) இடது பக்க கல்லன்
C) பேதுரு
Answer: A) பரபாஸ்
     (மாற்கு 15:7)
 
03. பிலாத்து யாரை பிரியப்படுத்த மனதுள்ளவனாய் இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தான்?
A) இயேசு
B) பிரதான ஆசாரியர்
C) ஜனங்கள்
Answer: C) ஜனங்கள்
     (மாற்கு 15:15)
 
04. இயேசுவுக்கு சிவப்பான மேலங்கியை உடுத்தி முள்முடி சூட்டியது யார்?
A) பிலாத்து
B) போர்ச்சேவகர்
C) நூற்றுக்கு அதிபதி
Answer: B) போர்ச்சேவகர்
     (மாற்கு 15:16,17)

 


05. அலெக்சந்தர், ரூப் இவர்களுடைய தகப்பன் யார்?
A) சீமோன்
B) யோசேப்பு
C) பரபாஸ்
Answer: A) சீமோன்
     (மாற்கு 15:21)


 

06. இயேசுவின் சிலுவையை சுமந்தது யார்?
A) சீமோன் பேதுரு
B) கானானியனாகிய சீமோன்
C) சிரேனே ஊர் சீமோன்
Answer: C) சிரேனே ஊர் சீமோன்
     (மாற்கு 15:21)
 
07. கபாலஸ்தலம் என்பதன் அர்த்தம் என்ன?
A) கெனேசரேத்
B) கொல்கொதா
C) கெத்செமனே
Answer: B) கொல்கொதா
     (மாற்கு 15:22)
 
08. திராட்சைரசத்தில் எதைக் கலந்து இயேசுவுக்கு குடிக்க கொடுத்தார்கள்?
A) கசப்பு
B) வெள்ளைப்போளம்
C) கடற்காளான்
Answer: B) வெள்ளைப்போளம்
     (மாற்கு 15:23)
 
09.  இயேசுவை சிலுவையில் அறைந்த நேரம்?
A) மூன்றாம் மணி
B) ஆறாம் மணி 
C) ஒன்பதாம் மணி
Answer: A) மூன்றாம் மணி
     (மாற்கு 15:25)

 


10. பூமியிலே அந்தகாரம் உண்டாயிருந்த மணி நேரம்?
A) மூன்று - ஆறு
B) ஆறு - ஒன்பது
C) மூன்று - ஒன்பது
Answer: B) ஆறு - ஒன்பது
     (மாற்கு 15:33)

 


11.  எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி என்று இயேசு கூப்பிட்ட நேரம்?
A) மூன்றாம் மணி நேரம்
B) ஆறாம் மணி நேரம்
C) ஒன்பதாம் மணி நேரம்
Answer: C) ஒன்பதாம் மணி நேரம்
     (மாற்கு 15:34)
 
12. மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றது யார்?
A) பிலாத்து
B) நூற்றுக்கு அதிபதி
C) போர்ச்சேவகன்
Answer: B) நூற்றுக்கு அதிபதி
     (மாற்கு 15:39)

 


13. கனம்பொருந்திய ஆலோசனைக்காரன், அரிமத்தியா ஊரான், தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவன் யார்?
A) சீமோன்
B) யோசேப்பு
C) பரபாஸ்
Answer: B) யோசேப்பு
     (மாற்கு 15:43)
 
14. பிலாத்துவினிடத்தில் இயேசுவின் சரீரத்தைக் கேட்டது?
A) சீமோன்
B) யோசேப்பு
C) யாக்கோபு
Answer: B) யோசேப்பு
     (மாற்கு 15:43)
 
15. இயேசு இத்தனை சீக்கிரமாய் மரித்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டது?
A) பிலாத்து
B) நூற்றுக்கு அதிபதி
C) போர்ச்சேவகன்
Answer: A) பிலாத்து
     (மாற்கு 15:44)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.