Type Here to Get Search Results !

MARK 14 | BIBLE QUIZ QUESTION & ANSWER IN TAMIL | மாற்கு 14 அதிகாரம் கேள்வி பதில்கள் | Jesus Sam

==========================

மாற்கு அதிகாரம் பதினான்கு (14)
வேதாகம வினா விடைகள்
=========================
MARK CHAPTER - 14
BIBLE QUIZ QUESTION & ANSWER IN TAMIL
==============================
01. எந்த பண்டிகையில் புளிப்பில்லாத அப்பத்தை சாப்பிடுவார்கள்?
A) கூடாரப் பண்டிகை
B) பிரதிஷ்டை பண்டிகை
C) பஸ்கா பண்டிகை
Answer: C) பஸ்கா பண்டிகை
     (மாற்கு 14:1)
 
02. பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்தது யார்?
A) சீமோன்
B) பர்திமேயு
C) யாக்கோபு
Answer: A) சீமோன்
     (மாற்கு 14:3)

 


03. ஒரு ஸ்திரீ நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியை இயேசுவின் சிரசில் ஊற்றிய இடம் எது?
A) சகேயு வீடு
B) சீமோன் வீடு
C) லாசரு வீடு
Answer: B) சீமோன் வீடு
     (மாற்கு 14:3)
 
04. யூதாஸ் காரியோத்து இயேசுவை யாரிடம் காட்டிக்கொடுத்தான்?
A) வேதபாரகர்
B) பிரதான ஆசாரியர்
C) ஜனத்தின் மூப்பர்
Answer: B) பிரதான ஆசாரியர்
     (மாற்கு 14:10)
 
05. இயேசு பஸ்காவை புசிக்க ஆயத்தம் பண்ணும்படி எத்தனை சீஷரை அனுப்பினார்?
A) இரண்டு சீஷர்கள்
B) மூன்று சீஷர்கள்
C) நான்கு சீஷர்கள்
Answer: A) இரண்டு சீஷர்கள்
     (மாற்கு 14:13)
 

06. இயேசுவும் சீஷரும் ஸ்தோத்திரப்பாட்டை பாடின பின்பு எங்கு சென்றார்கள்?
A) தேவாலயம்
B) ஒலிவமலை
C) கெத்செமனே
Answer: B) ஒலிவமலை
     (மாற்கு 14:26)
 
07. மேய்ப்பனை வெட்டுவேன், _________ சிதறடிக்கப்படும்.
A) ஓநாய்கள்
B) மந்தைகள்
C) ஆடுகள்
Answer: C) ஆடுகள்
     (மாற்கு 14:27)
 
08. இயேசு உயிர்த்தெழுந்த பின்பு எங்கு போவதாக சொன்னார்?
A) கலிலேயா
B) கப்பர்நகூம்
C) ஒலிவமலை
Answer: A) கலிலேயா
     (மாற்கு 14:28)

 


09. ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா என்று இயேசு யாரிடம் கேட்டார்?
A) யோவான்
B) சீமோன் பேதுரு
C) யாக்கோபு
Answer: B) சீமோன் பேதுரு
     (மாற்கு 14:37)
 
10. ஆவி உற்சாகமுள்ளது தான், மாம்சமோ __________ .
A) பலமுள்ளது
B) பலவீனமுள்ளது
C) உற்சாகமற்றது
Answer: B) பலவீனமுள்ளது
     (மாற்கு 14:38)

 


11. யூதாஸ் காரியோத்து இயேசு கிறிஸ்துவை எப்படி காட்டிக்கொடுத்ததாக மாற்கு நற்செய்தியாளர் காட்டுகிறார்?
A) போதகரே
B) ரபீ வாழ்க
C) ரபீ, ரபீ
Answer: C) ரபீ, ரபீ என்று சொல்லி அவரை முத்தஞ்செய்தான்
     (மாற்கு 14:45)
 
12. நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து தானா? என்று கேட்டது யார்?
A) ஏரோது
B) பிரதான ஆசாரியன்
C) பிலாத்து
Answer: B) பிரதான ஆசாரியன்
     (மாற்கு 14:61)
 
13. இயேசுவை கன்னத்தில் அறைந்தது?
A) ஜனங்கள்
B) போர்ச்சேவகர்
C) வேலைக்காரர்
Answer: C) வேலைக்காரர்
     (மாற்கு 14:65)
 
14. பேதுருவை பார்த்து நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்று சொன்ன ஸ்திரீ யாருடைய வேலைக்காரி?
A) ஏரோது
B) பிரதான ஆசாரியன்
C) பிலாத்து
Answer: B) பிரதான ஆசாரியன்
     (மாற்கு 14:66)

 


15. சேவல் எத்தனை தரம் கூவுகிறதற்கு முன்னே பேதுரு மூன்று தரம் மறுதலித்தான்?
A) ஒரு
B) இரண்டு
C) மூன்று
Answer: B) இரண்டு
     (மாற்கு 14:72)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.