01. எங்கு விழுந்த விதையை பறவைகள் பட்சித்துப்போட்டது?
A) வழியறுகு விழுந்த விதை
B) முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதை
C) கற்பாறைகளின் மேல் விழுந்த விதை
Answer: A) வழியறுகு விழுந்த விதை
(மத்தேயு 13: 4)
02. எங்கு விழுந்த விதை சீக்கிரத்தில் முளைத்தது?
A) வழியறுகே விழுந்தை விதை
B) கற்பாறை மேல் விழுந்த விதை
C) நல்ல நிலத்தில் விழுந்த விதை
Answer: B) கற்பாறை மேல் விழுந்த விதை
(மத்தேயு 13: 5)
03. எங்கு விழுந்த விதை 100, 60, 30 ஆக பலன் கொடுத்தது?
A) வழியறுகே விழுந்த விதை
B) பாறைகள் மேல் விழுந்த விதை
C) நல்ல நிலத்தில் விழுந்த விதை
Answer: C) நல்ல நிலத்தில் விழுந்த விதை
(மத்தேயு 13: 8)
04. இயேசுவிடம் ஏன் உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டது யார்?
A) பரிசேயர்
B) சதுசேயர்
C) சீஷர்கள்
Answer: C) சீஷர்கள்
(மத்தேயு 13: 10)
05. இருதயத்தில் விதைக்கப்பட்ட வசனத்தை பறிப்பவன் யார்?
A) சத்துரு
B) எதிராளி
C) பொல்லாங்கன்
Answer: C) பொல்லாங்கன்
(மத்தேயு 13: 19)
06. எங்கு விதைக்கப்பட்டவன் வசனத்தை கேட்ட உடன் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளுகிறான்?
A) வழி
B) கற்பாறை
C) நல்ல நிலம்
Answer: B) கற்பாறை
(மத்தேயு 13: 20)
07. கோதுமைக்குள் களைகளை விதைத்தது யார்?
A) சத்துரு
B) எதிராளி
C) பொல்லாங்கன்
Answer: A) சத்துரு
(மத்தேயு 13: 25)
08. பரலோக ராஜ்யம் எந்த விதைக்கு ஒப்பாயிருக்கிறது?
A) கடுகு
B) அத்தி
C) திராட்சை
Answer: A) கடுகு
(மத்தேயு 13: 31)
09. சகல விதைகளிலும் மிகச் சிறியது எது?
A) கடுகு
B) மிளகு
C) சீரகம்
Answer: A) கடுகு
(மத்தேயு 13: 32)
10. மாவு புளிக்கும்படி மூன்றுபடி மாவை அடக்கி வைத்தது யார்?
A) ஒரு ஸ்திரி
B) சீஷர்கள்
C) பணிவிடைக்காரர்
Answer: A) ஒரு ஸ்திரி
(மத்தேயு 13: 33)
11. எங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்?
A) பூமி
B) நரகம்
C) அக்கினி சூலை
Answer: C) அக்கினி சூலை
(மத்தேயு 13: 42,50)
12. பிதாவின் ராஜ்யத்தில் சூரியனைப்போல் பிரகாசிப்பது யார்?
A) நீதிமான்கள்
B) தூதர்கள்
C) ராஜ்யத்தின் புத்திரர்
Answer: A) நீதிமான்கள்
(மத்தேயு 13: 43)
13. நீதிமான்களிடமிருந்து பொல்லாதவர்களை பிரிப்பது யார்?
A) தேவன்
B) தேவ தூதர்கள்
C) மனுஷ குமாரன்
Answer: B) தேவ தூதர்கள்
(மத்தேயு 13: 49)
14. யாக்கோபு, யோசே, சீமோன், யூதா இவர்கள் யாருடைய சகோதரர்?
A) இயேசு
B) பேதுரு
C) யோவான்
Answer: A) இயேசு
(மத்தேயு 13: 55)
15. இயேசு வளர்ந்த ஊரில் அற்புதம் செய்யாதிருக்க காரணம் என்ன?
A) பொறாமை
B) கணவீனம்
C) அவிசுவாசம்
Answer: C) அவிசுவாசம்
(மத்தேயு 13: 58)




இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.