Type Here to Get Search Results !

12 MATTHEW | Bible Quiz Question with Answer in Tamil | மத்தேயு நற்செய்தி நூல் பனிரெண்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள் | Jesus Sam


======================
மத்தேயு சுவிசேஷம் அதிகாரம் பனிரெண்டு (12)
வேதாகம் வினா விடைகள்
MATTHEW BIBLE QUIZ CHAPTER 12
=======================


01. இயேசு பயிர் வழியே நடந்து போன நாள் எந்த நாள்?

A) ஓய்வு நாள்

B) பரிசுத்த நாள்

C) ஆயத்த நாள்

Answer: A) ஓய்வு நாள்

     (மத்தேயு 12: 1)

 

02. கதிர்களை கொய்து தின்னத் தொடங்கியது யார்?

A) இயேசு கிறிஸ்து

B) இயேசுவின் சீஷர்கள்

C) பரிசேயர்கள்

Answer: B) இயேசுவின் சீஷர்கள்

     (மத்தேயு 12: 1)

 

03. ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைப் புசித்தது யார்?

A) மோசேயும், ஆரோனும்

B) எலிசாவும், எலியாவும்

C) தாவீதும், அவனோடிருந்தவர்களும்

Answer: C) தாவீதும், அவனோடிருந்தவர்களும்

     (மத்தேயு 12: 4)

 

04. ஓய்வு நாளில் யார் வேலை செய்தால் குற்றமில்லை?

A) ஆசாரியர்கள்

B) வேதபாரகர்கள்

C) சதுசேயர்கள்

Answer: A) ஆசாரியர்கள்

     (மத்தேயு 12: 5)

 


05. ஓய்வு நாளுக்கும் ஆண்டவராயிருப்பது யார்?

A) தேவன்

B) மனுஷ குமாரன்

C) பரிசுத்த ஆவி

Answer: B) மனுஷ குமாரன்

     (மத்தேயு 12: 8)


 

06. இயேசுவை கொலை செய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஆலோசனை பண்ணியது யார்?

A) பரிசேயர்

B) சதுசேயர்

C) வேதபாரகர்

Answer: A) பரிசேயர்

     (மத்தேயு 12: 14)

 

07. குருடும் ஊமையுமான மனிதன் யார்?

A) முடவன்

B) பிசாசு பிடித்தவன்

C) சூம்பின கை உடையவன்

Answer: B) பிசாசு பிடித்தவன்

     (மத்தேயு 12: 22)

 

08. ”இவன் பெயல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றபடியல்ல” இவ்வாக்கியம் யார்? யாரிடம் சொன்னது?

A) பரிசேயர் – இயேசு கிறிஸ்துவிடம் சொன்னது

Bஆசாரியர்கள் – இயேசு கிறிஸ்துவிடம் சொன்னது

C) வேதபாரகர்கள் – இயேசு கிறிஸ்துவிடம் சொன்னது

Answer: A) பரிசேயர் – இயேசு கிறிஸ்துவிடம் சொன்னது

     (மத்தேயு 12: 24)

 

09. யாருக்கு விரோதமான தூஷணம் மனுஷனுக்கு மன்னிக்கப்படாது?

A) ஊழியர்களுக்கு விரோமான தூஷணம்

B) ஆவியானவருக்கு விரோதமான தூஷணம்

C) அதிகாரிகளுக்கு விரோதமான தூஷணம்

Answer: B) ஆவியானவருக்கு விரோதமான தூஷணம்

     (மத்தேயு 12: 31)

 


10. நம்மை நீதிமான் அல்லது குற்றவாளி என்று தீர்ப்பது எது?

A) நம்முடைய செயல்கள்

B) நம்முடைய ஆடை அணிகலன்கள்

C) நம்முடைய வார்த்தைகள்

Answer: C) நம்முடைய வார்த்தைகள்

     (மத்தேயு 12: 37)

 


11. வேதபாரகர், பரிசேயருக்கு இயேசு காட்டிய அடையாளம் என்ன?

A) யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்

B) மல்கியா தீர்க்கதரிசியின் அடையாளம்

C) ஏசாயா தீர்க்கதரிசியின் அடையாளம்

Answer: A) யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்

     (மத்தேயு 12: 38,39)

 

12. இரவும் பகலும் மூன்று நாள் மீனின் வயிற்றில் இருந்தது யார்?

A) யோனா

B) சிம்சோன்

C) கிதியோன்

Answer: A) யோனா

     (மத்தேயு 12: 40)

 

13. இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருந்தது யார்?

A) லாசரு

B) ஸ்தேவான்

C) மனுஷ குமாரன்

Answer: C) மனுஷ குமாரன்

     (மத்தேயு 12: 40)

 

14. யோனாவின் பிரசங்கத்தால் மனம் திரும்பிய பட்டணம் எது?

A) நினிவே

B) சோதோம்

C) பெத்சாய்தா

Answer: A) நினிவே

     (மத்தேயு 12: 41)

 


15. தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து யாரைப் பார்க்க வந்தாள்?

A) சவுல்

B) தாவீது

C) சாலமோன்

Answer: C) சாலமோன்

     (மத்தேயு 12: 42)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.