Type Here to Get Search Results !

MARK 10 Bible Quiz Question With Answer in Tamil | மாற்கு அதிகாரம் பத்து (10) வேதாகம கேள்வி பதில்கள் | Jesus Sam

==============
மாற்கு அதிகாரம் பத்து (10)
வேதாகம கேள்வி பதில்கள் 
==============
MARK CHAPTER TEN (10)
BIBLE QUIZ QUIESRION & ANSWER TAMIL
==============
01. புருஷனானவன் தன் மனைவியை தள்ளிவிடுவது நியாயமா என்று இயேசுவிடம் கேட்டது யார்?
A) பரிசேயர்
B) வேதபாரகர்
C) சீஷர்கள்
Answer: A) பரிசேயர்
     (மாற்கு 10:2)
 
02. இயேசுவை சோதிக்க வேண்டும் என்று வினவியது யார்?
A) மூப்பர்
B) வேதபாரகர்
C) பரிசேயர்
Answer: C) பரிசேயர்
     (மாற்கு 10:2)
 
03. மனைவியை தள்ளுதற்சீட்டை கொடுத்து தள்ளிவிடலாம் என்றது யார்?
A) தேவன்
B) மோசே
C) இயேசு
Answer: B) மோசே
     (மாற்கு 10:4)
 
04. புருஷன் தன் தகப்பன் தாயை விட்டு யாரோடு இசைந்திருக்க வேண்டும்?
A) மனைவியோடு
B) பிள்ளைகளோடு
C) உறவினரோடு
Answer: A) மனைவியோடு
     (மாற்கு 10:7)
 
05. சிறுபிள்ளைகளை இயேசுவினிடத்தில் கொண்டு வந்தவர்களை அதட்டியது யார்?
A) பரிசேயர்
B) வேதபாரகர்
C) சீஷர்கள்
Answer: C) சீஷர்கள்
     (மாற்கு 10:13)

 


06. இயேசுவிடம் வந்து துக்கத்தோடே திரும்பிச் சென்றது யார்?
A) நிக்கோதேமு
B) நூற்றுக்கு அதிபதி
C) ஐசுவரியவான்
Answer: C) ஐசுவரியவான்
     (மாற்கு 10:22)
 
07. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதை பார்க்கிலும் எது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்?
A) கழுதை
B) ஒட்டகம்
C) சிங்கம்
Answer: B) ஒட்டகம்
     (மாற்கு 10:25)
 
08. இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு உம்மை பின்பற்றினோமே என்றது யார்?
A) பேதுரு
B) யோவான்
C) யாக்கோபு
Answer: A) பேதுரு
     (மாற்கு 10:28)
 
09. இயேசு எருசலேமிற்கு போகையில் அவருக்கு பின்னே திகைத்து பயத்தோடே சென்றது யார்?
A) பரிசேயர்
B) சீஷர்கள்
C) ஜனங்கள்
Answer: B) சீஷர்கள்
     (மாற்கு 10:32)
 
10. யாக்கோபு, யோவான் இவர்களின் தகப்பன் பெயர் என்ன?
A) திமேயு
B) செபதேயு
C) அல்பேயு
Answer: B) செபதேயு
     (மாற்கு 10:35)

 


11. இயேசுவிடம் வந்து உமது மகிமையிலே ஒருவன் உமது வலது பரிசத்திலும் ஒருவன் உமது இடது பரிசத்திலும் உட்காரும்படி அருள்செய்யும் என்றது யார்?
A) பேதுரு, அந்திரேயா
B) யோவான், யாக்கோபு
C) திதிமு, பிலிப்பு
Answer: B) யோவான், யாக்கோபு
     (மாற்கு 10:35,37)
 
12. ஒருவன் பெரியவனாய் இருக்க விரும்பினால் _____ செய்யக்கடவன்?
A) தர்மம்
B) பணிவிடை
C) ஊழியம்
Answer: B) பணிவிடை
      (மாற்கு 10:43)
 
13. ஒருவன் முதன்மையானவனாக இருக்க விரும்பினால் _____ செய்யக்கடவன்?
A) தர்மம்
B) பணிவிடை
C) ஊழியம்
Answer: C) ஊழியம்
     (மாற்கு 10:44)
 
14. பர்திமேயு என்ற குருடனின் தகப்பன் பெயர் என்ன?
A) திமேயு
B) அல்பேயு
C) செபதேயு
Answer: A) திமேயு
     (மாற்கு 10:46)
 
15. தன் மேல்வஸ்திரத்தை எரிந்துவிட்டு இயேசுவிடம் வந்தது யார்?
A) திமேயு
B) பர்திமேயு
C) செபதேயு
Answer: B) பர்திமேயு
     (மாற்கு 10:50)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.