Type Here to Get Search Results !

MARK 9 | Bible Question with Answer in Tamil | மாற்கு 9 வேதாகம வினா விடைகள் தமிழில் | Jesus Sam

=======

மாற்கு அதிகாரம் ஒன்பது (9)
பைபிள் கேள்வி-பதில்கள்
==========
MARK -CHAPTER - NINE (9)
BIBLE QUIZ IN TAMIL
========

01. எத்தனை நாளுக்கு பின்பு இயேசு மலையில் ஏறி அங்கே மறுரூபமானார்?
A) மூன்று நாளைக்குப் பின்பு
B) ஐந்து நாளைக்குப் பின்பு
C) ஆறு நாளைக்குப் பின்பு
Answer: C) ஆறு நாளைக்குப் பின்பு
      (மாற்கு 9:2)
 
02. இயேசு கிறிஸ்து எத்தனை பேரைத் தனியே கூட்டிக்கொண்டுபோய் அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்?
A) ஒருவர்
B) இரண்டு பேர்
C) மூன்று பேர்
Answer: C) மூன்று பேர்
     (மாற்கு 9:2)
 
03. இயேசு மறுரூபமானபோது அவருடைய வஸ்திரம் எப்படி இருந்தது?
A) மின்னலைப் போல
B) உறைந்த மழையைப் போல
C) சூரியனைப் போல
Answer: B) உறைந்த மழையைப் போல
      (மாற்கு 9:3)
 
04. இயேசு மறுரூபமான மலையில் அவரோடு பேசியது யார்?
A) மோசே, எலியா
B) எலியா, எலியா
C) ஆபிரகாம், எலியா
Answer: A) மோசே, எலியா
      (மாற்கு 9:4)
 
05. இயேசு மறுரூபமான மலையில் பேதுரு எத்தனை கூடாரங்கள் போடுவோம் என்றான்?
A) இரண்டு கூடாரம்
B) மூன்று கூடாரம்
C) ஐந்து கூடாரம்
Answer: B) மூன்று கூடாரம்
      (மாற்கு 9:5)
 


06. இவர் என்னுடைய நேச குமாரன் இவருக்கு செவி கொடுங்கள் என்ற சத்தம் எங்கிருந்து உண்டானது?
A) மேகத்திலிருந்து
B) வானத்திலிருந்து
C) மலையிலிருந்து
Answer: A) மேகத்திலிருந்து
      (மாற்கு 9:7)
 
07. எலியா முந்தி வர வேண்டும் என்று சொல்லுகிறது யார்?
A) பரிசேயர்
B) வேதபாரகர்
C) சீஷர்கள்
Answer: B) வேதபாரகர்
      (மாற்கு 9:11)
 
08. இயேசு கிறிஸ்துவைக் குறித்து ஜனங்களோடு தர்க்கித்தது யார்?
A) பரிசேயர்
B) வேதபாரகர்
C) சீஷர்கள்
Answer: B) வேதபாரகர்
      (மாற்கு 9:16)
 
09. தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று தர்க்கம் பண்ணியது யார்?
A) பரிசேயர்
B) வேதபாரகர்
C) சீஷர்கள்
Answer: C) சீஷர்கள்
      (மாற்கு 9:34)
 
10. யாருக்கு இடறல் உண்டாக்கினால் அவனுடைய கழுத்தில் எந்திரக்கல்லை கட்டி சமுத்திரத்தில் தள்ள வேண்டும்?
A) சிறியோர்
B) வாலிபர்
C) பெரியோர்
Answer: A) சிறியோர்
      (மாற்கு 9:42)
 


11. எது இடறல் உண்டாக்கினால் அதை தறித்துப் போட வேண்டும்?
A) கண்
B) கை
C) கால்
Answer: B) கை, C) கால்
      (மாற்கு 9:43,45)
 
12. எது இடறல் உண்டாக்கினால் அதை பிடுங்கிபோட வேண்டும்?
A) கண்
B) கை
C) கால்
Answer: A) கண்
      (மாற்கு 9:47)
 
13. எங்கே புழு சாவாமலும் அக்கினி அவியாமலும் இருக்கும்?
A) பாதாளத்தில்
B) எரிநரகத்தில்
C) நரகத்தில்
Answer: C) நரகம்
      (மாற்கு 9:44,46,48)
 
14. எந்த பலியும் --------- உப்பிடப்படும்?
A) உப்பினால்
B) தண்ணீரீரினால்
C) அக்கினியினால்
Answer: A) உப்பினால்
      (மாற்கு 9:49)
 
15. மனுஷன் எதினால் உப்பிடப்படுவான்?
A) உப்பினால்
B) நரகத்தில்
C) அக்கினியினால்
Answer: C) அக்கினியினால்
      (மாற்கு 9:49)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.